4 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், இப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடையில் 102 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள மலைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும், மேலும் மண் சரிவு காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.