10 லட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை : அறுவருக்கு விளக்கமறியல்

 

இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நாலரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அதன்பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமயில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்