மண்டபம் அருகே இலங்கை படகை கை விட்டு தப்பி ஓடிய நபர்கள்

-மன்னார் நிருபர்-

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமாக இலங்கை கண்ணாடியிலை படகை கைவிட்ட நிலையில் மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் இலங்கை படகை மீட்டு கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக தப்பித்து சென்றதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம்(எஞ்சின்) ஆகியவற்றை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்ற பகுதி கடத்தல் தங்கம்இ கஞ்சா உள்ளிட்ட கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல்காரர்களாக இருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்