அதிரடியாக சதம் அடித்த குசல் மெண்டிஸ்

2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 வது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்தநிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் சதம் கடந்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 03ஆவது சதம் இதுவாகும்.

குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் கடந்ததுடன் ஒட்டுமொத்தமாக 77 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் 14 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 122 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை வீரர் ஒருவரின் அதிவேக சதமாக குறித்த சதம் பதிவாகியுள்ளது.