பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிப்பு

பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சீ.டி ஸ்கேன் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஒரேயொரு சீ.டி ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்ததன் காரணமாக குறித்த சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வருடாந்த சேவை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமையால், குறித்த இயந்திரத்தை சீர்செய்வதில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை சிறுவர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக காணப்படுகின்றது.

இலங்கையில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து குறித்த வைத்தியசாலைக்கு பல சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக மாற்றப்படுகின்றனர்.

சி.டி.ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், தற்போது சிகிச்சையளிப்பதற்கு பாரிய அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இதற்கான உரிய தீர்வு விரைவில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்