
ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு
மாளிகாவத்தை ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று வியாழக்கிழமை காலை இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் புதன் கிழமை 80க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்தானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை தொடருந்து சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
