தீ விபத்தில் இந்திய பிரஜை பலி

வெலிபென்ன பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இந்திய பிரஜையொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

எரிவாயு குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரு இந்திய பிரஜைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.