வயலுக்குள் பாய்ந்த வேன்

மூதூர் பச்சனூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் பயணித்த வாகனமே மட்டக்களப்பு – திருகோணமலை ஏ15 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், இந்த விபத்தில் எவருக்கும் பாரிய காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது