காதலால் அடிவாங்கிய பாடசாலை மாணவர்கள்

பாணந்துறை பிரபல பாடசாலை ஒன்றின் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.

காதல் தொடர்பின் அடிப்படையில் குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை பாடசாலை முடிந்து தங்களது வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் இருவர் பாணந்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.