நோயாளியை பார்க்க அனுமதிக்காத வைத்தியர் மீது தாக்குதல்
வத்தேகம வைத்தியசாலையில் நோயாளரை பார்க்க அனுமதிக்காத காரணத்தினால் குறித்த வைத்தியர் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்த மூவர் இரவு கடமையில் இருந்த வைத்தியரிடம் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளியை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியதாகவும் இந்த நேரத்தில் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டோம் என வைத்தியர் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் வைத்தியர் சந்தேக நபரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் வத்தேகம வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.