400 கிலோ கேரள கஞ்சா மீட்பு
நீர்கொழும்பு மாங்குளி களப்பு பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 13 கோடி ரூபா பெறுமதியான 400 கிலோ 810 கிராம் கேரள கஞ்சா 10 பொதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளி களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அவதானித்து பரிசோதித்த வேளையில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.