12 வயது மாணவரை உடைந்த போத்தலால் தாக்கிய சக மாணவர்
பாணந்துறை பகுதியில் மாணவர் ஒருவரை இன்னுமொரு மாணவன் போத்தலால் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் போத்தலை உடைத்து பிரிதொரு மாணவரை தாக்கி காயப்படுத்தியதாக காயமடைந்த மாணவரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் காயமடைந்த 12 வயதுடைய மாணவர் பாணந்துறையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.