காட்டு யானை தாக்கி ஒருவர் பலி
ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அருகில் உள்ள வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்