காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் இன்று சனிக்கிழமை புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை பகுதியைச் சேர்ந்த சதுரங்க (வயது – 28) எனும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.