பாவனையற்ற படகிற்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப்பகுதியில் இரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகிற்க்கு இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிசார் குறித்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசுங்கவின் கவனத்திற்க்கு கொண்டுவரப்பட்டு யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.