நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளைகளில் மழைப்பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நில்வளா கங்கையின் நீர்மட்டம் தல்கஹகொட மற்றும் பனந்துகம பிரதேசங்களிலும் படிப்படியாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அட்டங்களு ஓயாவின் நீர்மட்டம் துனமாலை பிரதேசத்திலும் படிப்படியாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்