
சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கம் கடத்தி வந்த யுவதி கைது
சட்டவிரோதமாக 1 கிலோ 748 கிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ்போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து நாட்டுக்குள் பிரவேசித்த யுவதி தொடர்பில், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, குறித்த பெண்ணிடம் இருந்து 1 கிலோ 748 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிதுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த பெண் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
