நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பித்தது

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முதலாவது நிலக்கரி தொகுதியயை இறக்கும் பணி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அன் படி 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 40 நிலக்கரி கப்பல்களை இறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் மாதத்தில் நான்கு நிலக்கரி தொகுதிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக தனது சமூக வலைத்தள பதிவில் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்