3 கை விரல், பற்கள் இல்லை ஏலியன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
மெக்சிகோவில் மனிதன் அல்லாத ஆனால் மனிதனைப் போன்ற 2 சடலங்களை மெக்சிகோ அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியுள்ளது.
பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும் சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை பார்ப்பதற்கு வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸின் சடலங்களாக இருக்கும் என்றும் இவற்றில் 3 கை விரல்கள் மட்டுமே காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மனிதனை ஒத்த சாயலில் ஆனால் வேற்றுகிரகவாசிகள் உருவத்தில் இவை உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏலியன்ஸ் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வரும் ஜேமி மவசான் இது ஆராய்ச்சியின் முக்கிய திருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பற்கள் இல்லாமல் 3 கைவிரல்கள் கொண்ட இவை ஏலியன்ஸ் என்று கூறியுள்ள அவர்இ பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறியுள்ளார்.