
12 வயது மாணவன் மீது பாலியல் துஸ்பிரயோகம் : ஆசிரியை கைது
அமெரிக்காவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் 12 வயதுடையவர் எனவும் சந்தேக நபரான ஆசிரியை 4 ஆம் தர மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியை மாணவர்களுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி அவர்களை பாலியல் ரீதியில் ஈடுபட தூண்ட முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
