புகையிரதத்தில் மோதிய யானை
வெலிகந்த பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டு வந்த ‘புலதுசி’ புகையிரத வண்டியில் மோதிய யானை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.
இதனால் குறித்த புகையிரதப் பாதை ஊடான போக்குவரத்தும்சில மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.