ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசர கூட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

முக்கிய சில தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கொழும்பு – டார்லி வீதியில், உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில்,நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய செயற்குழு கூட்டத்தில் தலைவரினால் அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்