இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்