ஓட்டமாவடியில் விபத்து : 12 வயது சிறுமி பலி

 

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் தந்தை கையுடைந்து காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காவத்தமுனை பனிச்சையடி வீதியைச்சேர்ந்த கலீல் என்பவரும் , அவரது 12 வயதான மகளும் மகளும் காவத்தமுனையிலிருந்து மாவடிவேம்பு செல்லும் வழியிலேயே இவ்விப்பத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்