
ஹெரோயின் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்.நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
