
நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை காணவில்லை
வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த 2 வயதான குழந்தையின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 2 வயதான குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்தது
குறித்த குழந்தையின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

