திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம்-நீதிமன்றம் தடை உத்தரவு

-திருமலை நிருபர் –

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான தடையுத்தரவு 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பெரியவெளி சந்தியில் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிசாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயல்படும் ஏழு பேருக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.