ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

மாளிகாவத்தையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மேட்டர் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.