
மதுபானங்களின் விலை குறைக்க வேண்டும்: டயானா கமமே
மதுபானங்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட விரோதமான முறையில் சாராயம் காய்ச்சுதல் மற்றும் போதை பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுற்றுளா துறை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் டயானா கமமே தெரிவித்துள்ளார்.
பாராளு மன்றத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற சுற்றுளா துறை அபிவிருத்தி ஒழுங்கு விதிகள் மீதான விவாதல் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் “முதலில் 10 மணிக்கு தூங்கும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் மாலை தீவு போன்ற இவ்வாறு இல்லை சுற்றுளா துறையினருக்கான விசேட திட்டங்கள் உள்ளன.உலக நடப்புக்கு ஏற்ப சுற்றுளா துறையில் மாற்றம் ஏற்படுத்தா விட்டால் ஒரு போதும் முன்னேற முடியாது. இலங்கைக்கு இரவு நேர பொருளாதாரம் முக்கியமாகும், இரவு 10 மணிக்கு பின்னர் சுற்றுளா விடுதிகளில் பார்கள் மூடப்படுகின்றன, 10 மணிக்கு மேல் மதுபானசாலைகளை ஏன் திறந்து வைக்க முடியாது, இவற்றை மாற்ற வேண்டும்.
இதே வேளை மதுபானங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாராயத்தின் விலை அதிகமாக உள்ளது இதனால் மக்கள் கசிப்பு காய்ச்சி குடிக்க நேரிடும்.அத்துடன் போதை மாத்திரையை பயன்னடுத்தும் நிலையும் ஏற்படும்.இதனால் கலால் திணைக்களத்திற்கு வருமானமே இல்லாமல் போகும். எனவே விலைகளை குறைக்க வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
