சாரதி நித்திரை: கார் தீக்கிரை

ஹொரவப்பொத்தானை மதவாச்சி பகுதிக்குட்பட்ட 4ம் மைல்கல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் காரொன்று தீக்கிரையாகியுள்ளது.

ஹொரவப்பொத்தானை பகுதியிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதை அடுத்து தீக்கிரையாகியுள்ளதுடன் காரில் பயணித்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கார் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையே விபத்திற்கான காரணம் என்று தெரிவித்த மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்