வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பருத்திப் பண்ணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இரு வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேசாலையில் இருந்து தலைமன்னார் ஊர் மனைக்கு சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றும் வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா சென்ற ஹயஸ் ரக வாகனமும் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்