யாழில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம்

 

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக யாழ்ப்பாண இளைஞர் பௌத்த சங்கம் அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர் அருண் சித்தார்த் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் பௌத்த தேரர்கள் உள்ளிட்ட சிலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம தேரர் உள்ளிட்ட கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்