
உரிய சிகிச்சை வழங்காமையே குழந்தை உயிரிழக்க காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு
பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படாமையினலேயே உயிரிழந்ததாக களனி – திப்பிட்டிகொட பகுதியை சேர்ந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
காய்ச்சல் காரணமாக குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக பொரளை- சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மாற்றப்பட்ட குறித்த குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது.
வைத்தியசாலையில் போதிய சிகிச்சை வழங்கப்படாமையினாலே தமது குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் குழந்தையின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அதன் பின்னரே இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
