
13 வயது சிறுமியை வன்புணர்ந்த 15 வயது சிறுவர்கள் நால்வர் கைது
13 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 15 வயதுடைய நான்கு பாடசாலை மாணவர்களை மனம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு பாடசாலை மாணவர்களும் மனம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பள்ளி மாணவியுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் சிறுமியை ஏமாற்றி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
