
வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியைச் தர்மலிங்கம் நகுலோஸ்வரன் ( வயது 47) படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
