
தெஹிவளையில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
கொழும்பு-தெஹிவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். சந்தேகிக்கின்றனர்.
தெஹிவளை ஆபர்ன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் தனது வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
