
யாழ் வாசி 43 மில்லியன் கேரளா கஞ்சாவுடன் கைது
43 மில்லியன் ரூபா பெறுமதியான 130 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறைக்கு அப்பால் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் டிங்கி படகு ஒன்றை சோதனையிட்டபோது மூன்று சாக்கு மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 61 பார்சல்களில் சுமார் 130 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.
இதையடுத்து கேரள கஞ்சா, டிங்கி படகு மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய யாழ்ப்பாணம் உடுத்துறையைச் சேர்ந்தவர். சந்தேக நபர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளனர்.
