பெண்களை நிர்வாணமாக பார்க்க ஆசைப்பட்ட 72 வயது முதியவர்!

இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்அவினாஷ் குமார் சுக்லா (72 வயது). இவர் இளம் பெண்கள் மீது ஆர்வம் உள்ளவர். இவரது பலவீனத்தை அறிந்த நபர்கள் அவரை ஏமாற்றி பெரிய அளவில் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் சிங்கப்பூரை சேர்ந்த பிரபல பழங்கால பொருட்களை சேமிக்கும் நிறுவனத்துடைய ஊழியர்கள் என்று கூறிக் கொண்டு, அவர்கள் சுக்லாவை அணுகியுள்ளனர்.

அவரிடம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பயன்படுத்தும் மாயக்கண்ணாடி தங்களிடம் இருப்பதாக கூறி அவரை நம்ப வைத்துள்ளனர். இந்த கண்ணாடி மூலமாக பெண்களை நிர்வாணமாக பார்க்க முடியும் என்றும், எதிர்காலத்தையும் கணிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மாயக்கண்ணாடியின் விலை ரூ. 2 கோடி வரை இருக்கும் என்றும், கூட்டாக பணத்தை பங்கிட்டு அந்த கண்ணாடியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதனை நம்பி தனது பங்கான ரூ. 9 லட்சம் வரை கொடுத்துள்ளார். இந்த பண பரிமாற்றம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒருகட்டத்தில் முதியவருக்கு மாயக்கண்ணாடி என்ற ஒரு பொருளை அவர்கள் கொடுத்துள்ளனர். நாட்கள் செல்லச் செல்ல இது மோசடி என்பதை உணர்ந்த இவர், தனது பணத்தை திரும்பக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளார்கள்.

அவர்கள் மிரட்டியதை தொடர்ந்து போலீசை அணுகியுள்ளார். பொலிஸார் விசாரித்ததில் அவர்கள் இதேபோன்று மேலும் சிலரிடம் கைவரிசை காட்டி பணத்தை களவாடியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5 கைத்தொலைபேசிகள், கார், ரூ. 28 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்