
வவுனியாவில் இரண்டு மாணவர்களின் இழப்பிற்கு வடக்கு ஆளுநர் அனுதாபம்
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார்.
அவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பதை அனைவரும் உறுதி செய்வோம், என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
