இரு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலி

திக்வெல்ல போதரகந்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை இன்று தங்காலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமோர் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்காலை, குடுவெல்ல – நகுலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அவருடைய வீட்டில் இருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.