
கிளிநொச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய தீர்த்தோற்சவம்
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
அந்தவகையில், இன்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தின் தீர்த்த உற்சவத்திருவிழாவும் ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்த்த உற்சவப்பூஜை வழிபாடுகளும் ஆலய தீர்த்தக் கணியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த உற்சவத்தில், நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள், அம்பாளை. தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

