
மட்டு.வாழைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்ய கோரி மனு சமர்ப்பிப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று வேல்ட் விசன் ஊடாக சிறுவர் கழக நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்துவதை தடை செய்யக் கோரி இன்று திங்கட்கிழமை பிற்பகல் திணைக்கள அதிகாரிகளிடம் மாணவர்களால் மனு கையளிக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள 200 சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களினால் கையொப்பம் இடப்பட்ட மகஜகர்கள் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ரி.அனந்தரூபன், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தயாநந்தி திருச்செல்வம், வாழைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி.அமலினி, வாழைச்சேனை பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தராஜா ஆகிய அதிகாரிகளிடம் மனு கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜர் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை வேல்ட் விசன் முகாமையாளர் அந்தோனிப்பிள்ளை ரவீந்திரன், வாழைச்சேனை வேல்ட் விசன் அபிவிருத்தி இலகுபடுத்தினர் திருமதி.கரோலினா றாகல் மற்றும் தொழில்முறை உளவியல் ஆலோசனை மையம் திறன் அபிவிருத்தி இலகுபடுத்தினர் மரியதாசன் சூசைதாசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.









