கடவுளுடன் பேசி மழை வர வைப்பேன்: பிக்குவின் தொலைபேசி உரையாடல்
பாதுக்கே அஜித்தவன்ச என்னும் பௌத்தப் பிக்கு, தான் கடவுளுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த பிக்கு, தொலைபேசி மூலம் மேற்கொண்ட உரையாடல் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலமைக்குத் தீர்வு காணும் நோக்கில் கடவுளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடவுளுடன் அடிக்கடி தான் பேசுவதாகவும் கடவுளிடம் கூறி மழையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உடவலவ பிரதேசத்திற்கு மழையை பெற்றுக் கொடுப்பதற்காகத் தான் அந்தப் பகுதிக்குச் செல்ல உள்ளதாகவும் அங்கு சென்று கடவுளிடம் வேண்டி மழையைப் பெற்றுக் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்