கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்”, “வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற சம்பந்தன்”,  “புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்?”  என எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி –  கிழக்கு ஆளுநரின் உத்தரவு : விகாரை கட்டும் பணி நிறுத்தப்பட்டது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்