பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

பதுளை மஹியங்கனை பிரதான வீதியில்ஹவந்தாவ பதுலுஓயா பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அல்லது காட்டு யானை தாக்கி இந்த இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்