மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில் நிலையம் ஆகியவை ஏ யூ லங்கா (AU Lanka) நிறுவனத்தின் அனுசரணையோடு நடத்தும் மாவட்டத்தின் மாபெரும் தொழில் கல்விச் சந்தை இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில்
இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

இதன் போது கார்கில்ஸ் புட்சிட்டி நிறுவனம், எச்.என்.பி. பினான்ஸ் நிறுவனம், சன்சைன், டயலொக் நிறுவனம், பவர் கேன்ட் பிலான்டசென், எல்.ஓ.எல்.சி அசுரன்ஸ், சொப்ட் லொஜிக் லைப், சைமா இன்டர்நெர்ஸனல் செர்விஸ், எஸ்.கே ஜீலன் பிவிடி, லூடா கர்மென்ட், என்.கே.டி குருப் ஒப் கம்பனி, ஈஸ்டெர்ன் செக்கியூருட்டி செர்விஸ், சன்பன்சி ஹெளஸ், விராஜ் மெயின்டனன்ஸ் செர்விஸ் என்ற தொழில் வழங்குனர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், தொழில் வாய்ப்புகளை பெற்று கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை தொழில் தேடுவோருக்கு அரிய வாய்ப்பு

மட்டு நகரில் மாபெரும் தொழில் கல்விச் சந்தை தொழில் தேடுவோருக்கு அரிய வாய்ப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்