நாய் குறுக்கே பாய்ந்ததால் ஏற்பட்ட நிலை
-யாழ் நிருபர்-
நவாலி வழுக்கையாறு வெளியால் நேற்றையதினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை நாயொன்று திடீரென குறுக்கே பாய்ந்தது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா துஷ்யந்தன் (வயது – 21) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இளைஞன் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்