மூடப்படாத மனிதபுதைகுழி : மனித உடல்களை நாய்கள் இழுத்துச் செல்லும் அவலம் (படங்கள்)

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாநகர சபையின் பொறுப்பில் உள்ள கோம்பயன் இந்து மயானத்தில் மூடப்படாத மனிதப் புதைகுழியில் உள்ள இறந்த உடல்களை  நாய்கள் இழுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆறுகால் மடப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை  இறந்த குழந்தை ஒன்றின் தலைப் பகுதி வீடு ஒன்றின் காணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் கோம்பயன் மயானத்தில் இறந்த உடல்களை அடக்கம் செய்யும் குழி ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குழி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறந்த சிசுக்களை அடக்கம் செய்யும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது குறித்த குழியில் சடலங்கள் போடப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை குறித்த பகுதிக்கு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்