மின்சார திருட்டில் ஈடுபட்டவர் கைது

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட மரத்தடி சந்தி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்சார சபை விஷேட குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை அடுத்து அவர்கள் மேற்கொண்ட தேடுதலில் அப்பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வீட்டினுள் திருட்டுத்தனமாக மின்சாரம் பாவிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக இத்திருட்டு சம்பவம் இடம் பெறுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

பின்பு அவருக்கு இரண்டு பிணைகள் அடிப்படையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்ப்பட்டவர் முன்னாள் திருகோணமலை நகரசபையின் உறுப்பினரின் கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.