
மட்டு.பார் வீதியில் மீட்கப்பட்ட சடலத்திற்கு அருகில் இறந்து கிடந்த நாய்
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள மதகின் கீழ் ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள மதகினுள் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்
எனினும் சடலம் மதகினுள் குப்புற விழுந்த நிலையில் கிடப்பதால் குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை குறித்த சடலத்திற்கு அருகில் நாயொன்று இறந்த நிலையில் கிடந்ததால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியது.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு அறிவிக்கப்பட்டு குறித்த நாயின் உடலை புதைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
